ராஜஸ்தான் அரசின் ராஜ்ய வித்யுத் உத்பதன் நிகாம் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட பார்சா நிலக்கரித் திட்டத்தின் சுரங்க நடவடிக்கைகளை ஹஸ்டியோ வனப்பகுதியில் அதானி குழுமம் கையாண்டு வருகிறது. இந்த திட்டத்துக்காக ஆயிரக்கணக்கான மரங்கள் வெட்டப்படுகின்றன. இதற்கு எதிராக பழங்குடியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சுமார் 5,000 மரங்களை அகற்ற அதிகாரிகள் முயற்சி செய்துள்ளனர். இதற்காக வனப்பகுதிக்குள் சென்ற போலீசாரை பழங்குடியினர் விரட்டி அடித்தனர்.