சாத்தூர் - Sattur

சாத்துார்: சட்டவிரோதமாக பட்டாசுகள் தயார் செய்தவர் கைது

விருதுநகர் மாவட்டம், சாத்துார் வட்டம், வெம்பக்கோட்டை அருகே உள்ள கீழக்கோதை நாச்சிபுரம் காலனி தெருவில் வசிப்பவர் கொடியரசன் இவர் தனது வீட்டின் அருகே தகர செட் அமைத்து சட்டவிரோதமாக பட்டாசுகள் தயார் செய்து இருப்பு வைத்து இருப்பதாக காவல் நிலையத்திற்கு தகவல் வந்தன. மேற்படி தகவலின் பேரில் வெம்பக்கோட்டை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் செண்பகவேலன் தலைமையில் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு நடத்தினர். ஆய்வில் சட்டவிரோதமாக பட்டாசுகள் தயார் செய்து இருப்பு இருந்ததை பறிமுதல் செய்த போலீஸார் கொடியரசன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீடியோஸ்


விருதுநகர்
Oct 18, 2024, 13:10 IST/சிவகாசி
சிவகாசி

சிவகாசி: பட்டாசு குடோனுக்கு வருவாய் துறையினர் சீல்

Oct 18, 2024, 13:10 IST
விருதுநகர் மாவட்டம், சிவகாசியிலிருந்து விஸ்வநத்தம் பகுதியில் உள்ள மெயின் ரோட்டில் அன்புராஜ் மற்றும் கருணை சோமசுந்தரம் ஆகிய இருவரும் தனிதனியாக லாரி டிரான்ஸ்போர்ட் நடத்தி வருகின்றனர். மேலும் இவர்கள் உரிய அனுமதி இல்லாமல், சட்ட விரோதமாக. தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகைக்கான பட்டாசுகளை லாரி மூலம் அனுப்பும் லாரி செட் நடத்தி வந்துள்ளார். இதுகுறித்து வருவாய்த்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற வருவாய் மற்றும் காவல் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது உரிய அனுமதி இல்லாமல் லாரி செட் செயல்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 300 பட்டாசு பண்டல்களோடு இரண்டு லாரி செட்டிற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். தீபாவளி பண்டிகையையொட்டி அரசின் அனுமதி இல்லாத கட்டிடங்களில் பட்டாசுகள் இருப்பு வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தால் பட்டாசுகளை பறிமுதல் செய்வதுடன், கட்டிடங்களுக்கும் சீல் வைப்பதோடு, சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய் மற்றும் காவல்துறை தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.