நடிகை ரம்யா பாண்டியன் ‘ஜோக்கர்’ படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் பரவலான கவனத்தை ஈர்த்தார். தொடர்ந்து பல படங்களில் நடித்த இவர் 'குக் வித் கோமாளி', 'பிக்பாஸ்' ஆகியவற்றில் பங்கேற்றத்தின் மூலம் மேலும் பிரபலமடைந்தார். இந்நிலையில் பெங்களூருவில் செயல்பட்டு வரும் யோகா மையத்தில் பணியாற்றி வந்த யோகா மாஸ்டர் லவல் தவான் என்பவருடன் ஏற்பட்ட நட்பு காதலாக மாறியது. இருவரின் குடும்பத்தாரின் ஒப்புதலுடன் வரும் நவம்பர் 8-ம் தேதி உத்தராகண்டில் உள்ள ரிஷிகேஷில் கோயில் ஒன்றில் திருமணம் நடைபெற உள்ளது.