விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம் கோல்வார்ப்பட்டி அணைக்கட்டு பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் வீ. ப. ஜெயசீலன் இன்று(அக்.14) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் அணைகளின் நீர் இருப்பு, நீர்வரத்து, மதகுகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய பராமரிப்பு பணிகள், வரத்து கால்வாய்கள் உள்ளிட்டவை குறித்து மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இவ்வாய்வின் போது மாவட்ட ஆட்சித்தலைவர் கூறியது, விருதுநகர் மாவட்டத்தில் சமீபத்தில் அனைத்துப் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், பெரும்பாலான நீர்ப்பிடிப்புகளில் நீர்வரத்து உள்ளது. மேலும் பொதுமக்கள் நீர்நிலைகளுக்கு செல்லாமல் பாதுகாப்புடன் இருக்குமாறும் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார். இந்த ஆய்வின் போது நீர்வளத்துறை செயற்பொறியாளர் மலர்விழி, உதவி செயற்பொறியாளர் கார்த்திகேயன், நீர்வளத்துறை அலுவலர்கள் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.