ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜரான சிகாமணிக்கு வரும் அக் 25-ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு.
விருதுநகர் மாவட்டம்,
பரமக்குடியில் 9-ம் வகுப்பு மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் பரமக்குடி நகராட்சி கவுன்சிலர் சிகாமணி, புதுமலர் பிரபாகர், ராஜாமுகமது மற்றும் புரோக்கர்களாக செயல்பட்ட அன்னலட்சுமி உமா, கயல்விழி ஆகிய 5 பேர் மீது பரமக்குடி மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செயது, கைது செய்தனர். இந்த வழக்கு சி. பி. சி. ஐ. டி-க்கு மாற்றப்பட்டு ராமநாதபுரம் மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் சிகாமணிக்கு ஜாமீன் வழங்கியது. ஜாமீனை ரத்து செய்யக்கோரி சி. பி. சி. ஐ. டி சார்பாக தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஜாமீனை ரத்து செய்ததுடன், வழக்கை ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றத்திற்கு மாற்றி 5 மாதங்களுக்குள் விசாரணையை முடிக்க உத்தரவிட்டது. இதை எதிர்த்து சிகாமணி தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்து 3 வாரத்திற்குள்ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் சிகாமணி ஆஜராக வேண்டும் உத்தரவிட்டது. இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் சிகாமணி இன்று ஆஜரானஅவரை வரும் அக். 25-ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி(பொ) சுதாகர் உத்தரவிட்டார்.