சாத்தூர் - Sattur

சாத்துார்: தகர செட் அமைத்து பட்டாசு தயாரித்தவர் கைது...

சாத்தூர் அருகே கல் குவாரி அருகே தகர செட் அமைத்து பட்டாசுகள் தயார் செய்தவர் கைது. பட்டாசு மற்றும் கருந்திரிகள் பறிமுதல். விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம், வெம்பக்கோட்டை அருகே உள்ள குகன்பாறை கிராமத்தில் இயங்கி வரும் மகாலட்சுமி குவாரி அருகே தகர செட் அமைத்து சட்டவிரோதமாக, உச்ச நீதிமன்றம் தடை செய்த சரவெடிகள் தயார் செய்வதாக வெம்பக்கோட்டை காவல் நிலையத்திற்கு தகவல் வந்தன. மேற்படி தகவலின் பேரில் சார்பு ஆய்வாளர் குருநாதன் தலைமையில் போலீளார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று சோதனை செய்தனர். சோதனையில் உச்ச நீதிமன்றம் தடை செய்த சரவெடிகள் தயார் செய்து விற்பனைக்கு இருந்ததை கண்டறியப்பட்டு அதை பறிமுதல் செய்தனர். மேலும் இந்த சட்டவிரோத செயலில் ஈடுபட்ட தென்காசி மாவட்டம், திருவேங்கடம், முக்கூட்டு மலையை சேர்ந்த கணசேன் என்பவரது மகன் அன்புராஜ் என்பவர் தெரிய வந்தன. மேலும் சரவெடிகளை பறிமுதல் செய்த போலீஸார் அன்பராஜ் மீது வெம்பக்கோட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீடியோஸ்


விருதுநகர்
Oct 18, 2024, 06:10 IST/விருதுநகர்
விருதுநகர்

அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர காலநீட்டிப்பு

Oct 18, 2024, 06:10 IST
திருச்சுழி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2024 ஆம் ஆண்டிற்கான மாணவர் நேரடி சேர்க்கை 18. 10. 2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையத்தில்  கணினி இயக்குபவர் மற்றும் திட்டமிடுதல் உதவியாளர் (COPA)  மற்றும் நில அளவையர் (SURVEYOR) ஆகிய பிரிவுகளில் காலி இடங்கள் உள்ளது.  இத்தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி அளிக்கப்பட்டு பயிற்சி முடிந்தவுடன் தனியார் மற்றும் அரசு துறைகளில் அப்ரண்டீஸ் மற்றும் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். விருப்பமுள்ள மாணவ மாணவிகள் தங்களது கல்வி மற்றும் சாதி அசல் சான்றிதழ்களுடன் அலுவலகத்திற்கு நேரில் வந்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக்கட்டணம் ரூ. 50/- பயிற்சியின்போது மாணவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகையாக ரூ. 750/- கட்டணமில்லா பேருந்து சலுகை விலையில்லா சீருடை விலையில்லா மிதிவண்டி, விலையில்லா வரைபடக்கருவிகள், விலையில்லா மூடுகாலணிகள், அரசு பள்ளியில் தமிழ் வழியில் பயின்ற மாணவியருக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழும் மாணவர்களுக்கு தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழும் மாதந்தோறும் கூடுதலாக ரூ. 1000/- வழங்கப்படும். திருச்சுழி சுற்று வட்டாரங்களில் உள்ள 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம் மேலும் விபரங்களுக்கு 98421-78028, 70100-40810, 95669-29663 என்ற தொலைபேசி  எண்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.