சாத்தூர் - Sattur

சாத்தூர்: ஊராட்சி எல்லை பிரச்சனை 400 கடை அடைத்து போராட்டம்

சாத்தூர் அருகே இருக்கன்குடி நத்தத்துபட்டி எல்லை பிரச்சனை 400க்கு மேற்பட்ட கடைகளை அடைத்து கிராமத்தினர் போராட்டம். விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலாகும். மேலும் இருக்கன்குடி மற்றும் நத்தத்துப்பட்டி ஆகிய இரண்டு ஊராட்சிக்கும் எல்லை பிரச்சனை நீண்ட காலமாக இருந்து வந்து உள்ளது. இந்த நிலையில் இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் இருக்கன்குடி மற்றும் நத்தத்துப்பட்டி ஊராட்சிகள் சார்பாக வழக்கு தொடரப்பட்டன. இந்த வழக்கில் இரு எல்லைகளை பிரித்து பதில் கூற வேண்டும் என உயர்நீதிமன்றம் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டது. இதையடுத்து இந்த எல்லையை அளவிட செய்ய உத்தரவு பிறப்பித்தார். இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் இருக்கன்குடி ஊராட்சி கடைகள் அனைத்தும் நத்தத்துப்பட்டி ஊராட்சிக்கு சொந்தம் என உத்தரவிட்டதாக கிராமத்தினர் மத்தியில் கூறப்படுகிறது. ஆட்சியரின் அறிவிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று இருக்கன்குடி கிராம மக்கள் மாரியம்மன் கோவிலை சுற்றியுள்ள 400க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து வணிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் போராட்டம் செய்பவர்களிடம் வருவாய் மற்றும் காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த பகுதியில் போராட்டம் தொடர்பாக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

வீடியோஸ்


விருதுநகர்