விருதுநகர்: ரேஷன் கார்டு வைத்துள்ள அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை; அமைச்சர்
விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்த வருவாய்த்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது உங்களுக்கும் எனக்கும் உள்ள உறவு 50 வருட உறவு. உங்களைப் பார்ப்பதில் எனக்கு சந்தோசம். என்னை பார்ப்பதில் உங்களுக்கு சந்தோசம். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை சிலருக்கு விடுபட்டுள்ளது. வரும் ஜனவரி மாதம் முதல் ரேஷன் கார்டு வைத்துள்ள அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும். அதேபோல முதியோர் உதவித்தொகை விண்ணப்பித்து ஆணை பெற்றுள்ள அனைவருக்கும் விரைவில் முதியோர் உதவித்தொகை வழங்கப்படும். எனக்கு ஆயுள் உள்ளவரை உங்களுக்காக உழைத்துக் கொண்டே இருப்பேன். கடவுள் என்னை எத்தனை நாட்களுக்கு ஓட விடுகிறாரோ அத்தனை நாட்களும் உங்களுக்காக நான் ஓடிக்கொண்டே இருப்பேன் என்று கூறினார்.