திருச்செந்தூர் நோக்கி சென்ற வேன் கவிழ்ந்து விபத்து

83பார்த்தது
திருப்பூரில் இருந்து முருக பக்தர்கள் 20 பேர் கந்த சஷ்டி திருவிழாவிற்காக சுற்றுலா வேனில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வழியாக திருச்செந்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் இன்று காலை வேலையில் அருப்புக்கோட்டை அருகே ராமானுஜபுரம் விலக்கு பகுதியில் மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் வேன் சென்று கொண்டிருக்கும் போது வேன் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை நடுவே உள்ள டிவைடரில் மோதி சாலையின் நடுவே வேன் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. ‌ இந்த விபத்தில் வேன் ஓட்டுநர் உள்ளிட்ட முருக பக்தர்கள் ஐந்து பேர் வீக்க‌ காயம் போன்ற லேசான காயம் அடைந்தனர். ‌ தாலுகா காவல் நிலைய போலீசார் வேனை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். அதேபோல பாண்டிச்சேரியில் இருந்து 15 முருக பக்தர்களுடன் திருச்செந்தூர் நோக்கி சென்று கொண்டிருந்த சுற்றுலா வேன் அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடி புறவழிச்சாலை புதூர் விலக்கு பகுதியில் திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் பாய்ந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. ‌ இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த ஆறு முருக பக்தர்கள் லேசான காயமடைந்தனர். இந்த
வேனில் பயணம் செய்த முருக பக்தர்களும், காயமடைந்த முருக பக்தர்களும் அங்கேயே முதலுதவி பெற்று மாற்று வேன் ஏற்பாடு செய்து அங்கிருந்து புறப்பட்டு திருச்செந்தூர் சென்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி