விருதுநகர் மாவட்ட நிர்வாகம், கல்வித்துறை மற்றும் வனத்துறை இணைந்து விருதுநகர் மாவட்டத்தில் செயல்படும் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு “இளம் பசுமை ஆர்வலர்“ என்ற சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. இப்பயிற்சி முகாமானது ஒவ்வொரு வாரமும் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 5 முகாம்கள் நடந்து முடிந்துள்ளது.
அதன்படி, 16. 11. 2024, 23. 11. 2024, 30. 11. 2024 மற்றும் 07. 12. 2024 ஆகிய தினங்களில் விருதுநகர் செந்திகுமார நாடார் கலைக்கல்லூரியிலும், சாத்தூர் இராமசாமி நாயுடு கலைக்கல்லூரியிலும், இராஜபாளையம் ராம்கோ பொறியியல் கல்லூரியிலும், அருப்புக்கோட்டை சௌடாம்பிகா பொறியியல் கல்லூரியிலும் “இளம் பசுமை ஆர்வலர்“ என்ற சிறப்பு பயிற்சி முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.