அன்னச்சத்திரத்தினை சீரமைப்பது குறித்து அமைச்சர் ஆய்வு

57பார்த்தது
விருதுநகர் மாவட்டம், நரிக்குடி அருகே மறையூர் கிராமத்தில் அழிந்து போகும் நிலையில் இருந்து வரும் ராணி மங்கம்மாள், மாமன்னர் மருதுபாண்டியர்களின் வரலாற்றுக்கு ஆதாரமாக திகழ்ந்து வரும் சுமார் 350 ஆண்டுகள் பழமை வாய்ந்த அன்ன சத்திரத்திரம் அமைந்துள்ளது.

அக்காலத்தில் சேது சமுத்திர யாத்திரையாக தனுஷ்கோடி, ராமேஸ்வரம் செல்பவர்களுக்காக மதுரை நாயக்கர்கள், சேதுபதிகள், மருதுபாண்டியர்கள் சத்திரங்களை கட்டி பராமரித்து பாதுகாத்து வந்துள்ளனர். அந்த வகையில் நரிக்குடி அருகேயுள்ள மறையூர் கிராமத்தில் இந்த அன்னச்சத்திரத்தை கட்டியதாக சொல்லப்படுகிறது.
தற்போது பயன்பாட்டில் இல்லாததால், இதன் மேற்பகுதியிலும், அதனை சுற்றியும் அடர்ந்து மரங்கள் வளர்ந்துள்ளது. இந்த நிலையில் வரலாற்றுஆதாரமாக விளங்கி வரும் அன்ன சத்திரம் அழிந்து வரும் நிலையில் அதனை பாதுகாக்கும் வகையில் அடர்ந்து வளர்ந்துள்ள மரங்களை அகற்றி, பழுது நீக்கி அதனை பாரம்பரிய சின்னமாக தமிழக அரசு பாதுகாக்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்த நிலையில் இன்று தமிழ்நாடு நிதி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம்தென்னரசு மற்றும் விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெயசீலன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வுகள் செய்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி