குழந்தைகளுக்கான நடை விழிப்புணர்வு பேரணி நடைபெறவுள்ளது

79பார்த்தது
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் நலனை கருத்தில்கொண்டு “குழந்தைகள் தினம் நவம்பர் 14“-யினை முன்னிட்டு 14. 11. 2024 அன்று காலை 09. 00 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து ”குழந்தைகளுக்கான நடை (Walk for Children)” என்ற தலைப்பில் மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் கையெழுத்து பிச்சாரம் மற்றும் விழிப்புணர்வு பேரணி நடைபெறவுள்ளது.

குழந்தைகள் நலன் சார்ந்த பணிகளில் தொடர்புடைய அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பத்திரிக்கையாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவன நிர்வாகிகள் மற்றும் தன்னார்வலர்கள் இவ்விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொள்ள வேண்டும். இப்பேரணியில் 18 வயதிற்கு மேற்பட்ட நபர்கள் மட்டுமே கலந்து கொள்ளவேண்டும்.

இப்பேரணியில் கலந்து கொள்பவர்கள் கட்டாயமாக நீலக்கலர் உடை அணிந்தே பங்கேற்க வேண்டும். இப்பேரணியின்போது குழந்தைத் திருமணம், பாலியல் வன்கொடுமை, குழந்தைத் தொழிலாளர் முறை ஒழித்தல், கல்வியின் அவசியம் மற்றும் குழந்தைகள் நலன் சார்ந்த சட்டங்கள் மற்றும் திட்டங்கள் குறித்து கலைக்குழுவினர் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ. ப. ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி