சுமை தூக்கும் கூலி பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்

63பார்த்தது
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை காந்தி நகரில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக செயல்முறை கிட்டங்கியில் 20க்கும் மேற்பட்ட சுமை தூக்கும் கூலி பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் இங்கு பல வருடங்களாக பணிபுரியும் சுமை தூக்கும் கூலி பணியாளர்களை தேவையில்லாத பொய்யான காரணங்களை கூறி அதிகாரிகள் சிவகாசி போன்ற ஊர்களுக்கு நீண்ட தூரம் பணியிட மாற்றம் செய்வதாக புகார் தெரிவித்து சுமை தூக்கும் கூலி பணியாளர்கள் நேற்றும் இன்றும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தினமும் கூலி வேலை செய்தும் தங்களை இது போன்று நீண்ட தூரம் உள்ள ஊர்களுக்கு பணியிட மாற்றம் செய்தால் போக்குவரத்துக்கு அதிக செலவு ஆகும் எனவும் மேலும் பல வருடங்களாக பணிபுரியும் தொழிலாளர்களை விடுத்து வெளியில் இருந்து பணியாட்களை வரவழைத்து சுமை தூக்கும் பணிகளை மேற்கொள்ள அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாகவும் கூலி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தொழிலாளர்களின் போராட்டம் காரணமாக நுகர் பொருள் வாணிபக் கழக செயல்முறை கிட்டங்கியில் இருந்து நியாய விலை கடைகளுக்கு அரிசி கொண்டு செல்லும் பணி முடங்கியுள்ளது. இதுபோன்று சுமை தூக்கும் கூலி பணியாளர்களை நீண்ட தூரம் பணியிட மாற்றம் செய்யக்கூடாது எனவும் அவர்கள் கோரிக்கை கொடுத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி