வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைத்த அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்

63பார்த்தது
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை வருவாய்த்துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் துவக்கி வைத்தார். அதன்படி கஞ்சநாயக்கன்பட்டியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூபாய் 17 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள கலையரங்க கட்டிடத்தையும், சுக்கில நத்தம் கிராமத்தில் ரூ 13 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையத்தையும் அமைச்சர் திறந்து வைத்தார். மேலும் ரூ 10 லட்சம் மதிப்பில் கட்டப்பட உள்ள நியாய விலை கட்டிடத்திற்கும் அமைச்சர் அடிக்கல் நாட்டினார். அதனைத் தொடர்ந்து மீனாட்சிபுரம் மற்றும் ஆமணக்கு நத்தம் கிராமத்தில் தலா ரூ 8 லட்சம் மதிப்பில் பயணிகள் நிழற்குடை கட்டுவதற்கும், ரூ 21 லட்சம் மதிப்பில் புதிதாக பைப் லைன் அமைக்கும் பணிகளுக்கும் அமைச்சர் அடிக்கல் நாட்டினார். அதனைத் தொடர்ந்து குருந்த மடம் கிராமத்தில் ரூபாய் 20 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட மேல்நிலை நீர் தேக்கதொட்டியையும், ரூ 14 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தையும் அமைச்சர் திறந்து வைத்தார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி