வானூர் - Vanur

கடலில் குளிக்கச் சென்ற மூதாட்டி உயிரிழப்பு

கடலில் குளிக்கச் சென்ற மூதாட்டி உயிரிழப்பு

புதுச்சேரி மாநிலம், பெரிய காலாப்பட்டு எத்திராஜ் தெருவைச் சோ்ந்த சக்கரபாணி மனைவி கிருஷ்ணவேணி (வயது 77). இவா், வியாழக்கிழமை விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகிலுள்ள புதுக்குப்பம் முருகன் கோயிலில் சுவாமிதரிசனம் செய்ய வந்தாா். சுவாமி தரிசனம் செய்து முடித்த பின்னா், அதே பகுதியிலுள்ள கடலில் கிருஷ்ணவேணி குளிக்கச் சென்றாா். ஆனால், வெகு நேரமாகியும் அவா் கரை திரும்பவில்லை. இந்த நிலையில் வெள்ளிக்கிழமை காலை இறந்த நிலையில் கிருஷ்ணவேணி சடலமாக மீட்கப்பட்டாா். கடலில் குளிக்கச் சென்றபோது நீரில் மூழ்கி அவா் உயிரிழந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்த கோட்டக்குப்பம் போலீஸாா் நிகழ்விடம் சென்று சடலத்தை மீட்டு, புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனா். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

வீடியோஸ்


ఖమ్మం జిల్లా