சணப்பை பசுந்தாள் சாகுபடி வேளாண் அதிகாரி ஆய்வு

58பார்த்தது
சணப்பை பசுந்தாள் சாகுபடி வேளாண் அதிகாரி ஆய்வு
முதல்வரின் 'மண்ணுயிர் காத்து; மன்னுயிர் காப்போம்' திட்டத்தின் கீழ் மண் வளத்தை மேம்படுத்தவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் நடப்பாண்டில் வானுார் தாலுகாவிற்கு 9, 450 கிலோ சணப்பை பசுந்தாள் உர விதைகள் 50 சதவீத மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் சம்பா நெல் சாகுபடிக்கு முன்பாக சணப்பை விதைகளை விதைப்பு செய்துள்ள விவசாயிகள் 45 நாட்கள் ஆகும்போது பசுந்தாள் உர பயிரினை மண்ணில் மடக்கி உழவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுபோன்று செய்வதால், மண்ணில் உள்ள உயிர் கரிமச்சத்துக்களை அதிகரித்து, அடுத்து வரும் பயிருக்கு அதிக மகசூல் கிடைக்கும்.

வி. புதுப்பாக்கம் கிராமத்தில் விவசாயி கணேசன், தனது விவசாய நிலத்தில் சணப்பை பசுந்தாள் உர பயிரை சாகுபடி செய்துள்ளார். இந்த உர பயிரை வேளாண் உதவி இயக்குனர் எத்திராஜ் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது, துணை வேளாண்மை அலுவலர் செந்தில்குமார், உதவி வேளாண்மை அலுவலர் ஜெயலட்சுமி, உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் சந்திரசேகர், கோவிந்தசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி