பொது பயன்பாட்டிற்கு வந்தது ஆரோவில் 'பாரத் நிவாஸ்

51பார்த்தது
பொது பயன்பாட்டிற்கு வந்தது ஆரோவில் 'பாரத் நிவாஸ்
விழுப்புரம் மாவட்டம், ஆரோவிலில் சர்வதேச நகரில் மதம், இனம், மொழி, அரசியல் வேறுபாடுகளை கடந்து, பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் ஒற்றுமையுடன் வசித்து வருகின்றனர். இங்குள்ள பாரத் நிவாஸ் 'ஏசி' வசதியுடன் கூடிய கலையரங்கமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. சுமார் 700 பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்த இந்த கலையரங்கில், ஆரோவில் சம்பந்தப்பட்ட கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்று வந்தன. வி. ஐ. பி. , க்கள் ஆரோவில் வரும் போது, இந்த கலையரங்கில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பது வழக்கம்.

முக்கியத்துவம் வாய்ந்த பாரத் நிவாஸ் கலையரங்கம், ஆரோவில் பவுண்டேஷன் செயலாளர் ஜெயந்தி ரவி வழிகாட்டுதன்படி, பொது பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்காக புதுச்சேரி பல்கலைக்கழகமும், ஆரோவில் பவுண்டேஷனும் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளனர். இதன்படி பாரத் நிவாசில், குறைந்த வாடகையில் முதல் நிகழ்ச்சியாக, புதுச்சேரி சிவாலயம் கலைக்கூடம் சார்பில் பரத நாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சி நேற்று(செப்.10) நடந்தது. இதில் புதுச்சேரி லாஸ்பேட்டை எம். எல். ஏ. , வைத்தியநாதன் பங்கேற்று, பரத நாட்டிய நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு, பரிசு வழங்கினார்.

தொடர்புடைய செய்தி