நவமால்மருதுார் பள்ளிக்கு கல்வி சீர் வரிசை வழங்கல்

53பார்த்தது
நவமால்மருதுார் பள்ளிக்கு கல்வி சீர் வரிசை வழங்கல்
கண்டமங்கலம் அடுத்த நவமால்மருதுார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் வளர்ச்சிக்கு முன்னாள் மாணவர்கள், கல்வி சீர்வரிசை பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமையாசிரியர் ஜெயந்தி தலைமை தாங்கினார்.

வட்டாரக் கல்வி அலுவலர் சுமதி, வட்டார வள மேற்பார்வையாளர் (பொறுப்பு) அரிகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியை மலர்விழி வரவேற்றார். நிகழ்ச்சியில், கடந்த 1988-1989ம் கல்வியாண்டு முதல் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள், பள்ளியின் வளர்ச்சிக்கு ஆம்ப்ளிபயர், புளூ டூத், ஸ்பீக்கர் பாக்ஸ், பென் டிரைவ் உட்பட 42 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை கல்வி சீர்வரிசை பொருட்களாக வழங்கினர்.

பள்ளி தலைமையாசிரியர் ஜெயந்தி பெற்றுக்கொண்டார். ஆசிரியர் கந்தன் நன்றி கூறினார்.

தொடர்புடைய செய்தி