நொளம்பூர் ஊராட்சியில் முதல்வர் திட்ட முகாம்

78பார்த்தது
திண்டிவனம் அடுத்த நொளம்பூர் ஊராட்சியில் முதல்வரின் முகவரி துறை சார்பில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் பங்கேற்று பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டார்.

விழுப்புரம் மாவட்டம் ஒலக்கூர் ஊராட்சிக்கு உட்பட்ட நொளம்பூர் ஊராட்சியில் தமிழக முதல்வரின் முகவரி துறை சார்பில் நடைபெற்ற "மக்களுடன் முதல்வர்" திட்ட முகாமில் தமிழக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே. எஸ். மஸ்தான் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். தொடர்ந்து பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.

நிகழ்ச்சிக்கு ஒலக்கூர் ஒன்றிய குழு தலைவர் பாங்கை சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். ஒலக்கூர் ஒன்றிக்குழு துணைத் தலைவர் ராஜாராம், ஊராட்சி மன்ற தலைவர் லதா, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் எழிலரசி ஏழுமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் திண்டிவனம் வட்டாட்சியர் சிவா, ஒலக்கூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நாராயணன், சரவணகுமார் ஆகியோர் நன்றி கூறினர்.

தொடர்புடைய செய்தி