வானுார் அடுத்த நைனார்பாளையம் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் பரசுராமன். இவரது மனைவி வள்ளி, (70); இவர்களுக்கு கணபதி, (40); என்ற மகனும், மூன்று மகள்களும் உள்ளனர். இதில், மூன்று மகள்களுக்கும் திருமணமாகி விட்டது. இன்னும் கணபதிக்கு திருமணமாகவில்லை. இந்நிலையில், பரசுராமன் இறப்பதற்கு முன்பாக, தனது மனைவி பெயரில் விவசாய நிலத்தையும், எஞ்சிய இடங்களை, கணபதிக்கு திருமணமாகி அவரது குழந்தைகள் அனுபவிக்கும் படி சொத்துக்களை எழுதி வைத்துள்ளார்.
இந்நிலையில், தனது கடனை அடைப்பதற்காக தனது நிலத்தில் இருந்த தேக்கு மரங்களை வெட்டுவதற்கு வள்ளி முயற்சி செய்துள்ளார். நேற்று முன்தினம் வள்ளிக்கும், அவரது மகன் கணபதிக்கும் சொத்து பிரச்சனை ஏற்பட்டது, அதில் ஆத்திரமடைந்த கணபதி, அவரது தாய் வள்ளியையும், தங்கை சுமதியையும் தடியால் தாக்கி மிரட்டல் விடுத்துள்ளார். அதில் படுகாயமடைந்த இருவரும் வானூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். புகாரின் பேரில் வானூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, கணபதியை கைது செய்தனர்.