சைபர் மோசடி கும்பல் பெண் வழக்கறிஞரை வீடியோ அழைப்பில் நிர்வாணமாக்கி மிரட்டி பணம் பறித்துள்ள சம்பவம் நடந்துள்ளது. கறுப்புப் பண வழக்கில் கைது செய்யப் போவதாக மிரட்டி வழக்கறிஞரை வீடியோ அழைப்பில் மோசடி கும்பல் நிர்வாணமாக்கியுள்ளது. பின்னர், ஆன்லைன் மூலம் ரூ.50,000 பணத்தை பறித்துள்ளனர். மும்பை அந்தேரியை சேர்ந்த 36 வயது பெண் வழக்கறிஞரான இவர், இணைய மோசடி செய்பவர்களின் வலையில் விழுந்து பணத்தை இழந்துள்ளார்.