திருக்கோவிலூரில் உலக புகைப்படம் தினத்தை முன்னிட்டு தென்பெண்ணை வீடியோ மற்றும் புகைப்பட கலைஞர்கள் நலசங்கம் சார்பில் 200 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
உலகப் புகைப்பட தினம் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 19ஆம் தேதி அன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில், இன்று கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் ஐந்து முனை சந்திப்பில் உலக புகைப்படம் தினத்தை முன்னிட்டு தென்பெண்ணை வீடியோ மற்றும் புகைப்பட கலைஞர்கள் நலச்சங்கம் சார்பில் 200 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திருக்கோவிலூர் தென்பெண்ணை வீடியோ மற்றும் புகைப்பட கலைஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.