மரக்காணம், கோட்டக்குப்பம் கடலில் விநாயகர் சிலைகள் விஜர்சனம்

63பார்த்தது
மரக்காணம், கோட்டக்குப்பம் கடலில் விநாயகர் சிலைகள் விஜர்சனம்
மரக்காணம், கோட்டக்குப்பம் கடலில் போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் விஜர்சனம் செய்யப்பட்டது.

செஞ்சி, திண்டிவனம், வானுார், மரக்காணம், கோட்டக்குப்பம் பகுதியில் கடந்த 7ம் தேதி விநாயகர் சதுார்த்தியை முன்னிட்டு நுாற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் விநாயகர் சிலைகளை வைத்து பொதுமக்கள் மற்றும் இந்து முன்னனி அமைப்பினர் வழிபாடு செய்தனர். மூன்றாம் நாளான நேற்று (செப்.9) செஞ்சி, திண்டிவனம், வானுார், மரக்காணம், கோட்டக்குப்பம் பகுதியில் வைத்திருந்த நுாற்றுக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளை பக்தர்கள் வாகனங்களில் ஊர்வலமாக கொண்டு வந்தனர். பிற்பகலில் திண்டிவனம், செஞ்சி பகுதி விநாயகர் சிலைகளை மரக்காணம் அடுத்த எக்கியர்குப்பம், தாழங்காடு, வசவன்குப்பம் கடலிலும், வானுார், கோட்டக்குப்பம் பகுதி விநாயகர் சிலைகளை தந்திராயன்குப்பம், நடுக்குப்பம் கடலிலும் படகு மூலம் விஜர்சனம் செய்தனர். நுாற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி