
கிளியனூர் அருகே மதுபாட்டில்கள் கடத்தியவர் கைது
கிளியனூர் அடுத்த எடையான்குளம் பகுதியில் புதுச்சேரி மதுபாட்டில்கள் விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் கிளியனூர் சப் இன்ஸ்பெக்டர் மாதவன் தலைமையில் போலீசார் அப்பகுதியில் சோதனை செய்தனர். அப்போது, எடையான்குளம் மாரியம்மன் கோவில் தெருவில் ஒரு வீட்டில் மதுபாட்டில்கள் வைத்து விற்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பேரில் வீட்டின் உரிமையாளரான காதர்பாஷா, 56 என்பவரை பிடித்து விசாரித்ததில், புதுச்சேரி மதுபாட்டில்கள் வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, வழக்குப் பதிவு செய்தனர். மேலும் அவரிடமிருந்த 29 புதுச்சேரி மதுபாட்டில்கள், கார் மற்றும் ரூ.5,500 பணத்தை பறிமுதல் செய்தனர்.