ஒகேனக்கலில் நீர்வரத்து அதிகரிப்பு

56பார்த்தது
ஒகேனக்கலில் நீர்வரத்து அதிகரிப்பு
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து வினாடிக்கு 17,000 கன அடியாக அதிகரித்துள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக, இன்று (செப்டம்பர் 14) காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு சுமார் 14,000 கன அடியாக இருந்த தண்ணீர் வரத்து, மாலை 5.30 மணி நிலவரப்படி 16,000 கனஅடியாக அதிகரித்தது. இரவு 7 மணி நிலவரப்படி நீர் வரத்து வினாடிக்கு 17,000 கன அடியாக மேலும் அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்தி