திண்டிவனத்தில் கட்டுமான பணிகள் முடிவடைந்து 16 மாதங்களுக்கும் மேலாக திறக்கப்படாமல் இருந்த கிளைச் சிறையை தமிழக முதல்வர் காணொளி மூலம் திறந்து வைத்தார்
ஜக்காம்பேட்டையில், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்கு அருகில், இரண்டரை ஏக்கர் பரப்பளவில், தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகத்தின் சார்பில், ரூ. 8. 39 கோடி செலவில் கட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டு கடந்த 7. 5. 2021. துவக்கப்பட்டு 26. 10. 2022ல் பணிகள் முழுவதுமாக முடிவடைந்து கடந்த 31. 3. 2023ல் இந்த கட்டிடமானது முழுவதுமாக சிறைத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஆனால் கடந்த 16 மாதங்களுக்கும் மேலாக இந்த கட்டிடம் திறக்கப்படாமல் பூட்டியே கிடந்தது.
புதியதாக கட்டப்பட்டுள்ள இந்த கிளைச் சிறைச்சாலை விசாலமான இடத்தில், கைதிகள் எளிதில் தப்பிச் செல்லாதவாறு, சிறையை சுற்றி 20 அடி உயரத்திற்கு சுற்றுச்சுவரும், அதன் மேல் 5 அடி உயரத்திற்கு இரும்பு ரோல் அமைக்கப்பட்டுள்ளது.
இதில் நிர்வாக அலுவலகம், நவீன வசதியுடன் கூடிய சமையலறை, பாதுகாப்பு அறை, 100 விசாரணை கைதிகள் அடைக்கும் வகையிலான சிறைச்சாலை மற்றும் டார்மெட் அறை என 5 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த கிளை சிறைச்சாலை கட்டிடத்தை தமிழக முதல்வர் மு. க ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் வேலூர் சரக சிறைத்துறை டி. ஐ. ஜி ராஜலட்சுமி, கடலூர் மத்திய சிறைத்துறை எஸ். பி. , ஊர்மிளா ஆகியோர் கலந்து கொண்டனர்.