கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கு தொடர்பாக மருத்துவக் கல்லூரி முன்னாள் முதல்வர் கைது செய்யப்பட்டுள்ளார். பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில், தடயங்களை அழிக்க முயன்றது, சதித்திட்டம், விசாரணையை குழப்பியது உள்ளிட்ட குற்றச்சாட்டில், ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷை சிபிஐ கைது செய்தது. தலா காவல் நிலையத்தின் பொறுப்பு அதிகாரி அபிஜித்தும் கைது செய்யப்பட்டுள்ளார்.