விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்த ஆதனப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் அன்பழகன் என்பவரது மகன் முத்துவேல் வயது 28, இவர் தனியார் பைனான்ஸ் கம்பெனியில் மேலாளராக பணி புரிந்து வருகிறார்.
இந்த நிலையில் இவர் புதுவை மாநிலத்தை சேர்ந்த கேசவன் என்பவரது மகன் ஸ்ரீதர் என்பவரது காரை எடுத்துக்கொண்டு பைனான்ஸ் வேலை சம்பந்தமாக பிரம்மதேசம் அருகே உள்ள வங்காரம் கிராமத்திற்கு பழனிவேல் என்பவரை சந்திப்பதற்காக சென்றுள்ளார். அப்பொழுது திடீரென வங்காரம் அருகே கார் சென்று கொண்டிருந்த போது ரேடியேட்டர் பகுதியில் இருந்து புகை வெளிவந்துள்ளது.
அப்பொழுது காரில் இருந்து இறங்கி பார்த்தபோது கார் தீப்பற்றி எரிந்துள்ளது. இதைக் கண்ட முத்துவேல் உடனடியாக காரில் இருந்து இறங்கி தீயணைப்புத்துறையினர் மற்றும் பிரம்மதேசம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இருந்தபோதிலும் கார் முழுவதும் எரிந்து சாம்பல் ஆனது. இது குறித்து பிரம்மதேசம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.