வேலூர் நகரம் - Vellore City

வேலூரில் செம்மரக்கட்டை பறிமுதல்

வேலூர் அரியூர் அடுத்த ஊசூர் பகுதியில் இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இன்று அதிகாலை வேளையில் ஊசூர் டாஸ்மாக் கடை அருகே நின்றிருந்த காரை சோதனை செய்ய போலீசார் முயன்றுள்ளனர்.  போலீசாரை கண்டதும் காரில் இருந்த மூவர் தப்பி ஓடிய நிலையில், காரில் செம்மரக்கட்டைகள் இருப்பது தெரிந்தது. பின்னர் சுமார் பத்து லட்சம் மதிப்பிலான 13 செம்மரக்கட்டைகளை காருடன் பறிமுதல் செய்த போலீசார் அரியூர் காவல் நிலையம் எடுத்துச் சென்றனர். மேலும் வனத்துறையினரை வரவழைத்து மதிப்பீடு செய்து, கட்டைகளை போலீசார் வனத்துறையிடம் ஒப்படைத்தனர். மேலும் தப்பியோடிய கும்பலை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

வீடியோஸ்


నిర్మల్ జిల్లా