வேலூர்: தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டம்

84பார்த்தது
வேலூர்: தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டம்
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் வேலூர் மாவட்ட பொதுக்குழு கூட்டம் வேலூர் பெல்லியப்பா கட்டிடத்தில் நடைபெற்றது. மாவட்ட துணைத்தலைவர் கே. விசுவநாதன், மாவட்ட தலைவர் அமுதா ஆகியோர் தலைமை தாங்கினர். 

வேலூர் கிளை செயலாளர் முத்து. சிலுப்பன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் ஜனார்த்தனன், மாவட்ட பொருளாளர்  குமரன் ஆகியோர் அறிக்கைகள் சமர்ப்பித்து பேசினர். மாவட்ட துணைத்தலைவர்கள் தேவி, காயத்திரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணைத்தலைவர் என். மாதவன் மாவட்ட செயல்பாட்டு அறிக்கையினை வெளியிட்டார். நஞ்சில்லா உணவும் நலமான வாழ்வும் என்ற தலைப்பில் அரசு சித்த மருத்துவர் சோ. தில்லைவாணன் பேசினார். 

பல்வேறு அமைப்பு நிர்வாகிகள் செந்தமிழ்செல்வன், பாஸ்கர்,  பிரபு, ரவீந்திரன்,  ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பேசினர். மேலும், அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் மற்றும் நிர்வாக பணியாளர்களின் பணியிடங்களை நிரப்ப வேண்டும். அனைத்து அரசு பள்ளிகளிலும் கழிப்பறை வசதி, அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும். கற்றல் கற்பித்தல் பணிகளை தவிர மற்ற அலுவல் சார்ந்த பணிகளை கைவிட வேண்டும், அண்ணா கலையரங்கை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும், அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் கட்டாயமாக தமிழ் வழி பிரிவுகள் தொடர்ந்து செயல்பட அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி