
வேலூர்: கஞ்சா போதையில் வனப்பகுதியில் தீ வைத்த இருவர் கைது
வேலூர் செங்காநத்தம் மலைப்பகுதியில் கஞ்சா போதையில் தீ வைத்ததாக வனத்துறைக்கு வந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வனவர் நிர்மல் குமார் மற்றும் வனக்காப்பாளர் நவீன் குமார் ஆகியோர் சென்றுள்ளனர். அப்போது, மலையில் பாறை இடுக்கில் மறைந்து கஞ்சா புகைத்துக் கொண்டிருந்த சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்த இர்பான் (28), பகத் பாஷா (23) ஆகிய இருவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.