வேலூர் மெயின் பஜாரில் மருத்துவ உபகரணங்கள் விற்பனை செய்யும், கஸ்தூரி ரங்கன் என்பவரின் கடை மற்றும் அதன் 2 குடோன்களில் 30 லிட்டர் மெத்தனாலை சட்ட விரோதமாக பதுக்கி வைத்து தெரியவந்தது. இதை, மும்பையில் இருந்து வாங்கி, தனியார் மருத்துவமனை மற்றும் மருத்துவ ஆய்வகங்களுக்கு சட்ட விரோதமாக விற்பனை செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, கடை மற்றும் குடோன்களுக்கு வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்டோர் சீல் வைத்தனர். மேலும், கள்ளச்சாராயம் கும்பலுக்கு மெத்தனால் விற்பனை செய்யப்பட்டதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.