வேலூர் மாவட்டம் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் மாவட்டம் முழுவதும் உள்ள போலீசாரின் ரோந்து பணி வாகனங்கள் போலீஸ் ஜீப் பஸ் உள்ளிட்ட வாகனங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது ஏடிஎஸ்பி பாஸ்கரன், ஆயுதப்படை டிஎஸ்பி வெங்கடேசன் உள்ளிட்ட காவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.