வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த காந்திகணவாய் பகுதியில் மல்லிகா என்பவர் வனப்பகுதியை ஒட்டிய விவசாய நிலத்தில் ஆடுகளை வளர்த்து வருகிறார்.
ஆடுகளை மேய்ச்சலுக்காக விட்டிருந்த போது ஒரு ஆட்டை சிறுத்தை தாக்கியுள்ளது. இதனையடுத்து ஆடு கத்தும் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் கூச்சலிடவே, சிறுத்தை ஆட்டை விட்டு அங்கிருந்து அருகே இருந்த வனப் பகுதிக்கு ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த குடியாத்தம் வனத் துறையினர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.