திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை சேர்ந்த குமார் என்பவர் வேலூர் கிரீன் சர்க்கிலில் உள்ள தனியார் லோடு வேன் ஷோரூம் ஒன்றில் டாட்டா லோடு வேனை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வாங்கி உள்ளார்.
அண்மையில் இதன் கியர் பாக்ஸ்கள் பழுதாகியதால் மூன்று வருட வாரண்டி இருப்பதால் இதனை மாற்றிக் கொடுக்கும்படி குமாரின் மனைவி ஜீவிதா மற்றும் ஜீவிதாவின் சகோதரர் சங்கர் ஆகியோர் வாகனத்தோடு ஷோரூமுக்கு வந்த நிலையில் நிர்வாகத்தினர் கவனிக்க வைத்து உரிய பதில் அளிக்காததாலும், புதியதாக கியர் பாக்ஸ் மாற்றியதாக கூறுகிறார்கள். ஆனால் தங்களுக்கு நம்பிக்கை இல்லை திறந்து காட்டுங்கள் என கேட்டதற்கு மிரட்டுகிறார்கள் என கூறி கிரீன் சர்க்கிலில் இருந்து சத்துவாச்சாரி செல்லும் சர்வீஸ் சாலையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த வேலூர் வடக்கு காவல் துறையினர் மூன்று பேரை அழைத்துச் சென்றனர். பின்னர் நிர்வாகத்தினர் அழைத்துப் பேசி அனுப்பி வைத்தனர்.
இதனால் கிரீன் சர்க்கிள் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுகுறித்து ஷோரூம் நிர்வாகத்தினரிடம் கேட்டபோது, இவர்களுக்கான சர்வீஸ் காலம் முடிந்ததை நினைவூட்டி நாங்கள் தான் வரவழைத்தோம். புதிய பொருள் மாற்றிக் கொடுக்க கேட்கிறார்கள் ஆனால் இவர்களுக்கான வாரண்டி முடிந்து விட்டது. அதனை எடுத்துக் கூறினோம். ஆனால் தாக்கப்பட்டதாக கூறுகிறார்கள். அப்படி எதுவும் செய்யவில்லை எனக் கூறினர்.