*வேலூரில் கன்னியாகுமரியில் திருவள்ளூவர் சிலை வைத்து 25 ஆண்டுகள் நிறைவை ஒட்டி வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் திருவள்ளூவர் சிலைக்கு ஆட்சியர் சட்டமன்ற உறுப்பினர் மேயர் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை*
வேலூரில் உள்ள பழைய பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள திருவள்ளூர் சிலைக்கு தமிழர்களின் புகழை பரைசாற்றும் வகையில் கன்னியாகுமரியில் திருவள்ளூவர் சிலை வைத்ததன் 25 ஆம் ஆண்டை கொண்டாடும் வகையில் திருவள்ளூவர் திரு உருவ சிலைக்கு மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி , வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் மேயர் சுஜாதா துணை மேயர் சுனில் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் வேலூர் தந்தை பெரியார் அரசு மாவட்ட மைய நூலகத்தில் திருக்குறள் குறித்து பேச்சு போட்டி கட்டுரை உள்ளிட்ட போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசுகளையும் ஆட்சியர் சுப்பு லெட்சுமி வழங்கினார் இவ்விழாவில் மாவட்ட நுலகர் பழனி. கண்காணிப்பாளர் சிவக்குமார் உள்ளிட்டோர் திரளான பொதுமக்களும் கலந்துகொண்டனர்.