பிரபல ரவுடியின் மனைவியின் புகாருக்கு எஸ் பி மறுப்பு!

78பார்த்தது
சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி அரும்பாக்கம் ராதா ( ராதாகிருஷ்ணன்) வேலூர் மத்திய சிறையில் உள்ளார். ஆயுள் கைதியான இவரை சிறையில் தனி அறையில் வைத்து கொடுமைப் படுத்தப்படுவதாகவும், ஜெய்லர் அருண்குமரன் என்பவர் பணம் கேட்பதோடு போலீசாரிடம் கூறி என்கவுண்டர் செய்து விடுவோம் என்று மிரட்டுவதாகவும், என் கணவருக்கு என்ன நடந்தாலும் அதற்கு முழு காரணம் ஜெயிலர் தான் என்றும், ரவுடி ராதாவின் மனைவி தீபிகா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.

இதற்கு வேலூர் மத்திய சிறையில் கண்காணிப்பாளர் பரசுராமன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

ரவுடி ராதாவின் மனைவி தீபிகாவின் குற்றச்சாட்டு குறித்து தொலைபேசி மூலம் மத்திய சிறை கண்காணிப்பாளர் பரசுராமனை தொடர்பு கொண்டு கேட்டபோது, "ரவுடி ராதாவின் மனைவி கூறிய புகாரில் உண்மை தன்மையில்லை. எதற்காக இந்த மாதிரியான புகாரினை தெரிவித்துள்ளார்கள் என்பது தெரியவில்லை. பணம் கேட்டு ஜெயிலர் மிரட்டுகிறார் என்பது நம்பக் கூடியதாக இல்லை. ஜெயிலருடன் எப்போதும் ஒரு அலுவலர் இருப்பார். சிறையில் விதிகளின்படி தான் அனைத்து கைதிகளும் நடத்தப்படுகிறார்கள். கொடுமைப்படுத்தப்படுவதாகவும், பணம் கேட்கப்படுவதாகவும் தீபிகா வைத்துள்ள குற்றச்சாட்டுக்கு ஏதேனும் ஆதாரம் இருப்பின், அந்த ஆதாரத்துடன் புகார் தெரிவிக்கலாம், "என்றார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி