தரிசு நிலம் விளைநிலங்களாக மாறியது எப்படி? ஆட்சியர் பேட்டி

83பார்த்தது
வாணியம்பாடி அருகே 20 ஆண்டுகளாக தரிசு நிலமாக இருந்த 34 ஏக்கர் நிலங்களை விளைநிலங்களாக மாற்றிய விவசாயிகள். கூலி வேலைக்கு சென்றவர்கள் தற்போது நிலத்தின் உரிமையாளர்கள், கண்ணியமான பொருளாதார நிலையை எட்டியுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பேட்டி.

வாணியம்பாடி, செப். 26- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பூங்குளம் ஊராட்சிக்குட்பட்ட கிராம பகுதிகளில் கடந்த 20 ஆண்டுகளாக தரிசு நிலங்களாக இருந்த நிலத்தை, மாவட்ட நிர்வாகம் மற்றும் வேளாண்மை துறை சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை திட்டத்தின் கீழ் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் ஒன்றிணைந்து, தரிசு நிலங்களாக இருந்த 34 ஏக்கர் நிலத்தை, விளைநிலங்களாக மாற்றியமைக்கத்து, விவசாயம் செய்து அறுவடைக்கு தயாராக இருந்த வேர்கடலை, பயிர்களை, செய்தியாளர்கள் பயணம் திட்டத்தின் கீழ் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் ஆய்வு மேற்க்கொண்டர்.

அதனை தொடர்ந்து விவசாயிகளுடன் கலந்துரையாடி, அவர்களின் நிறை குறைகளை கேட்டறிந்து, விவசாயிகளுக்கு தேவையான உரங்கள், விதைகள், மற்றும் இடுபொருட்களை ஆட்சியர் தர்ப்பகராஜ் வழங்கினார்.

தொடர்புடைய செய்தி