சுரங்கப்பாதையில் இருந்த சிசிடிவியை உடைத்த பள்ளி மாணவர்கள்

83பார்த்தது
வேலூர் சத்துவாச்சாரி பகுதியில் ஆர்டிஓ சாலையிலிருந்து எதிரே உள்ள கெங்கையம்மன் கோவில் பகுதிக்கு செல்ல சுரங்கப்பாதை உள்ளது. சுரங்கப்பாதையில் கண்காணிப்புக்காக பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவை கடந்த 19ஆம் தேதி சத்துவாச்சாரி அரசு பள்ளி மாணவர்கள் மூவர் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.

சிசிடிவி சேதமானதை அறிந்த தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரி இன்று சிசிடிவி வீடியோவுடன் சத்துவாச்சாரி அரசு பள்ளிக்கு சென்று பள்ளி தலைமை ஆசிரியரிடம் தெரிவித்துள்ளார். பின்னர் வீடியோவில் பதிவாகி இருந்த மாணவர்களின் பெற்றோரை அழைத்த தலைமை ஆசிரியர் மாணவர்களை கண்டித்ததோடு, இது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என்று எச்சரித்துள்ளார்.

மேலும் சிசிடிவியை உடைத்த மூன்று மாணவர்களிடமும் செய்து தவறுக்கு மன்னிப்பு கேட்டும், வரும் நாட்களில் இதுபோன்று செய்ய மாட்டோம் என உறுதி கூறியும் ஆசிரியர் மன்னிப்பு கடிதம் எழுதி வாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி