வேலூர் மாநகரில் காலை முதல் வெயில் சுட்டெரித்த நிலையில் மதிய வேளையில் சுமார் ஒரு மணி நேரம் மழை கொட்டி தீர்த்தது. சத்துவாச்சாரி, வள்ளலார், பெருமுகை, வேலப்பாடி, சேன்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை பெய்தது.
கனமழையினால், ஆவின் சர்வீஸ் சாலை மற்றும் சத்துவாச்சாரி ஆர். ஐ (வருவாய் ஆய்வாளர்) அலுவலகம் முன்பு சாலையில் மழை நீர் குளம் போல தேங்கியது. அதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். மேலும் மழையினால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.