அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நவம்பர் 5-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் ஜனநாயக கட்சி வேட்பாளராக கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். இந்நிலையில், 'கமலா ஹாரிசின் சாதனைகள்' என்ற பெயரில் புத்தகம் ஒன்று விற்பனைக்கு வந்துள்ளது. இந்த புத்தகத்தை வாங்கி பார்த்தவர்களுக்கு அதிர்ச்சி தரும் விதமாக அந்த புத்தகத்தின் அனைத்து பக்கங்களும் காலியாக இருந்தது. கமலா ஹாரிஸ் எந்த சாதனையும் படைக்கவில்லை என்பதை சூசகமாக இப்படி கூறியுள்ளனர் என நெட்டிசன்கள் கூறிவருகின்றனர்.