நெல்லையைச் சேர்ந்த பிரபல ரவுடி எஸ்டேட் மணி வேலூர் மத்திய சிறையில் இருந்தபோது சிறைகாவலர்களை அவதூறாக பேசி தாக்கம் முயன்றதாக பாகாயம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். எஸ்டேட் மணி மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் பாகாயம் காவல் நிலையத்தில் பதியப்பட்ட வழக்கு தொடர்பான விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்து வந்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து எஸ்டேட் மணியை பிடிக்க நீதிமன்றம் பிடிவாரண்டு பிறப்பித்து இருந்த நிலையில், மதுரை தனிப்படை போலீசார் கேரள மாநிலம் மூணாறில் துப்பாக்கி முனையில் கைது செய்தனர். பின்னர் எஸ்டேட் மணியை மதுரையிலிருந்து வேலூர் அழைத்து வந்த வேலூர் தனிப்படை போலீசார் பாகாயம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதையடுத்து எஸ்டேட் மணியை வேலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பிறகு நீதிமன்ற காவலில் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.