தமிழ்நாடு சட்டமன்ற பொது நிறுவனங்கள் குழு தலைவர் ஏ. பி. நந்தகுமார் தலைமையில், மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி முன்னிலையில், குழு உறுப்பினர்கள் ஈஸ்வரன், கடம்பூர் ராஜி, சிந்தனை செல்வன், வேலு, ஜவாஹிருல்லா, சட்டமன்ற பேரவை முதன்மை செயலாளர் சீனிவாசன் ஆகியோர் வேலூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை ஆய்வு செய்தனர். பின்னர், வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடந்தது.
இதையடுத்து, சட்டமன்ற பொது நிறுவனங்கள் குழு தலைவரும், அணைக்கட்டு எம்எல்ஏவுமான ஏ. பி. நந்தகுமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் ஆய்வு செய்தோம். பொது நிறுவனங்கள் குழுவானது 2021 ம் ஆண்டு 67 நிறுவனம் கொண்ட 93 ஆயிரம் கோடி இருந்தது. 22ம் ஆண்டு முதல்வர் மு. க. ஸ்டாலின் பொறுப்பு ஏற்ற பிறகு ₹1 லட்சத்து 8 ஆயிரத்து 949 கோடியாக உயர்த்தியுள்ளது. இதில் 21ம் ஆண்டில் ₹5, 207 கோடி கிராஸ் நஷ்டத்தை, 22ம் ஆண்டு ₹3, 862 கோடியாக குறைந்துள்ளது.
மாவட்டத்தில் உள்ள பல்வேறு பிரச்னைகளை இந்த கூட்டத்தின் மூலம் ஆய்வு செய்துள்ளோம். எந்த எந்த திட்டங்கள் தொய்வாக உள்ளதோ அந்த திட்டத்தை விரைவாக முடிப்பதற்கும், புதிய திட்டங்கள் கொண்டு வருவதற்கும் அந்தந்த துறையின் சார்பில் என்ன நன்மைகள் செய்ய முடியுமோ அதையும் செய்து தர வேண்டும் என அறிவுரை கூறியுள்ளோம், "என்றார்.