திருப்பத்தூர்: வாகனம் மோதி விபத்து ஒருவர் படுகாயம்

55பார்த்தது
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை எடுத்த சின்ன காமியம்பட்டு பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் வாணியம்பாடியில் இருந்து இரண்டு இளைஞர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது எதிரே வந்த இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிய விபத்தில் வாணியம்பாடியை சார்ந்த நபருக்கு பலத்த அடி. விபத்தை ஏற்படுத்தி விட்டு இருசக்கர வாகனத்தில் வந்த நபரை பொதுமக்கள் துரத்தி பிடிக்க முற்பட்டதும் தப்பி ஓடினார்.

பின்னர் 108 ஆம்புலன்ஸின் மூலம் விபத்தில் காயம் அடைந்தவரை திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி