பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் 3ஆம் நாளுக்கான ப்ரோமோ வெளியானது. இந்த எபிசோடில் விஷாலுக்கும், பவித்ராவிற்கும் இடையே வார்த்தை போர் வெடித்தது. வி.ஜே விஷால், டி போட்டு பவித்ராவை கூப்பிட்டதால் கோபப்பட்டு பவித்ரா, என்னை அப்படி நீங்கள் கூப்பிடாதீங்க. எனக்கு அது பிடிக்காது என்று சொல்ல, நான் எல்லாரையும் அப்படி தான் கூப்பிடுகிறேன் என்று விஷால் சொல்கிறார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.