வேலூர் அடுத்த சலவன்பேட்டையை சேர்ந்தவர்கள் முருகேசன் மாலதி தம்பதியர். இவர்கள் அதே பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவருக்கு ரூபாய் 11 லட்சத்தை கடனாக கொடுத்துள்ளனர். கடனை பெற்ற கண்ணன் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் கொடுத்த பணத்தை முருகேசனும் அவரது மனைவி மாலாவும் கண்ணனின் வீட்டிற்கு சென்று குடும்பத்தாரிடம் கேட்டுள்ளனர். அப்போது அவர்கள், "நீங்கள் பணம் கொடுத்தது எங்களுக்கு தெரியாது. பணம் எதுவும் எங்களால் கொடுக்க முடியாது, " என்று தெரிவித்துள்ளனர்.
இதனால் விரக்தி அடைந்த முருகேசன் மாலா தம்பதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தகவல் அறிந்த வேலூர் தெற்கு காவல் நிலைய போலீசார் உடல்களை மீட்டு பிரத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் போலீசார் முருகேசன் வீட்டில் சோதனை செய்தபோது கடிதம் ஒன்று கிடைத்திருப்பதாகவும், கண்ணன் என்பவருக்கு கொடுத்த பணத்தை அவர்களின் குடும்பத்தாரிடமிருந்து பெற முடியாத விரக்தியில் தற்கொலை செய்து கொண்டதாக அதில் எழுதி இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.