வேலூர் மாவட்ட நிர்வாகத்தின் முக்கிய அறிவிப்பு

56பார்த்தது
வேலூர் மாவட்ட நிர்வாகத்தின் முக்கிய அறிவிப்பு
வேலூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டுள்ள பேனர்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்றும், பிரதான சாலையின் நடுவே சென்டர் மீடியங்களில் அனுமதி இல்லாமல் அமைக்கப்பட்டுள்ள கேபிள் வயர்களை எந்தவித முன் அறிவிப்பும் இன்றி அப்புறப்படுத்தப்படும் என்றும் மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வேலூர் மாநகராட்சி எல்லைக்குள் அனுமதி இல்லாமல் வைக்கப்படும் பேனர்களை உடனடியாக தாங்களாகவே அப்புறப்படுத்த வேண்டும். தவறும் பட்சத்தில் தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி விதிகள் 343 (1) ன் படி விளம்பரப் பதாகைகள் மற்றும் விளம்பர தட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டு, அகற்றப்பட்டதற்கான செலவினத்தை பேனர்களை நிறுவிய நபர்களிடமிருந்து வசூலிக்கப்படும். அனுமதி வழங்கப்பட்ட விளம்பர பதாகைகள் அனுமதிக்கும் மாறாக நிறுவப்பட்டு இருந்தால் அதனையும் அப்புறப்படுத்த வேண்டும்.


பிரதான சாலையின் நடுவே சென்டர் மீடியனில் அனுமதி இல்லாமல் அமைக்கப்பட்டுள்ள கேபிள் வயர்கள் எந்தவித முன்னறிவிப்பு இன்றி அப்புறப்படுத்தப்படும், " என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி