வேலூர் மாநகராட்சி உட்பட்ட பகுதியில் அனுமதியில்லாமல் வைக்கப்படும் பேனர்களை உடனடியாக தாங்களாகவே அப்புறப்படுத்தப்படவேண்டும். மேலும் தவறும் பட்சத்தில் மாநகராட்சியால் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகைகள் மற்றும் விளம்பர தட்டிகளையும் தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சி விதிகள் 343(1)ன் படி பறிமுதல் செய்யப்படும்.
மேலும் பேனர்கள் அகற்றுவதற்கான செலவினத்தை அதை நிறுவிய நபரிடமிருந்து வசூலிக்கப்படும் என இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. அனுமதி வழங்கப்பட்ட விளம்பர பதாகைகள் அனுமதிக்கு மாறாக நிறுவப்பட்டு இருந்தால் அதனையும் அப்புறப்படுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் வேலூர் மாநகராட்சி பகுதிகளில் அனுமதியில்லாமல் வைக்கப்படும் பேனர்களை அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.