வேலூர் முழுவதும் பாதாள சாக்கடை திட்டம் என பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. சாலையில் நடக்கவே முடியல என தமிழ்நாடு சட்டமன்ற பேரவை குழு தலைவரிடம் முதியவர் ஒருவர் ஆங்கிலத்தில் ஆள் ஆபிஸர்ஸ் நாட் இன்ட்ரஸ்டிங் என ஆங்கிலத்தில் குறையை தெரிவித்தது அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் பொது நிறுவன ஆய்வு கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி உடன் சட்டமன்ற பேரவையின் தலைவர் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ பி நந்தகுமார், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தரும் போது முதியவர் ஒருவர் வேலூர் முழுவதும் சாலைகள் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது.
நடக்கவே முடியல இங்கு உள்ள ஆல் ஆபிஸர்ஸ் நாட் இன்ட்ரஸ்டிங், ஒன் செகண்ட் லுக்கியர் என தன்னுடைய குறையை தெரிவித்தார். முதியவர் ஆங்கிலத்தில் குறையை தெரிவித்தது அங்குள்ள அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது.