
வேலூர்: முதன்மை கல்வி அலுவலர் பொறுப்பேற்பு
வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக பணியாற்றி வந்த மணிமொழி பணி நிறைவுபெற்றார். தொடர்ந்து இந்த பணியிடம், வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) தயாளனிடம் முழு கூடுதல் பொறுப்பாக வழங்கி பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தொடர்ந்து, அவர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக பொறுப்பேற்றுக் கொண்டார். மேலும் மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) பணியிடம், அகரம் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சத்யபிரபாவிடம் கூடுதல் பொறுப்பாகவும் வழங்கப்பட்டுள்ளது.